ஆசிய குத்துச்சண்டை: தங்கம் வென்று ரித்திகா சாதனை
தாய்லாந்தில் நடந்த 22 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 80 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரித்திகா அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ஆடவருக்கான 75 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ், உஸ்பெகிஸ்தான் வீரர் ஷவ்கட்ஜோன் போல்டே உடன் மோதினார். இப்போட்டியில் தோல்வியை தழுவிய நீரஜ், வெள்ளிப் பதக்கம் வென்றார்.





