--- --:--:-- --

முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு மாணவன் கஞ்சா வியாபாரியால் வெட்டிக் கொலை!

16

சிவகங்கை அருகே வாணியங்குடி கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ராஜேஷ் முன்விரோதம் காரணமாக கஞ்சா வியாபாரியால் ஓட ஓட வெட்டிக் கொலை. உடலை கைப்பற்றிய சிவகங்கை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வாணியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேல்முருகன் இந்திரா தம்பதியினர். இவர்களது ஒரே மகன் ராஜேஷ் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் கஞ்சா வியாபாரி குதாம் சேகர் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினருக்கும் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

 

தற்போது வேல்முருகன் ஈரோட்டில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி இந்திரா சிவகங்கையில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார். இவர்களது மகன் ராஜேஷ் இன்று மதியம் தனது நண்பர்களுடன் வாணியங்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு பேசிக்கொண்டிருக்கும் போது கஞ்சா வியாபாரி குதாம்சேகர் தலைமையில் தயாநிதி, தம்பிதுரை, விக்னேஷ், மருதுபாண்டி, வெற்றிவேல் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தி, அரிவாள், இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

 

அவர்களிடமிருந்து தப்பி ஓடிய ராஜேஸ் கிராம மந்தை திடல் அருகே சென்றபோது, வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ் துடிதுடித்து இறந்தார். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சிவகங்கை மானாமதுரை ரோடு அருகில் பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா வியாபாரி பட்டப்பகலில் துணிகரமாக நடத்திய பத்தாம் வகுப்பு மாணவனை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த ராஜேஷ் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர்.

 

வாணியங்குடியில் பதட்டத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 25 ஆண்டுகளாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ள கஞ்சா வியாபாரியை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon