--- --:--:-- --

தருமபுரம் மடத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு..!

7

ருமபுரம் விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மடத்திற்கு உள்ள அச்சுறுத்தல் காரணமாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

தருமபுரம் ஆதினத்தின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாக சிலர் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக தெரிய வந்தது.

 

ஆதினத்தின் சகோதரன் விருதகிரி அளித்த புகாரின் பேரில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஐந்து பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

 

திருமணத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இரண்டு பேர் மாறி மாறி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon