பிலிப்கார்ட்டில் ஆர்டர் செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச்…கற்களாக வீட்டுக்கு வந்தது..!
பிளிப் கார்ட்டில் ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்த நிலையில் கற்கள் அனுப்பப்பட்டதாக இசையமைப்பாளர் சாம் சி எஸ் குற்றம் சாட்டியுள்ளார். ட்விட்டரில் பதிவிட்ட அவர் சகோதரருக்கு பரிசளிக்க பிலிப்கார்டில் ஆர்டர் செய்ததாகவும் ஆனால் பார்சலில் பிளாஸ்டிக் பொட்டலங்களில் வைத்து கற்கள் அனுப்பபட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து புகார் அளித்து அந்த வாட்ச்க்கான தொகையை திருப்பி கேட்டபோது பிளிப்கார்ட் தர மறுத்து விட்டதாகவும் ஆதலால் பிளிப்காட்டில் யாரும் பொருட்களை வாங்க வேண்டாம் என்றும் அதில் தெரிவித்துள்ளார் .இதனிடையே ஷாமை தொடர்பு கொண்ட பிளிப்கார்ட் நிறுவனம் புகாரை ஆராய்ந்து சதி செய்வதாக தெரிவித்துள்ளது.







