--- --:--:-- --

இந்தியாவில் ஆப்பிள் செல்போன் விற்பனை இருமடங்கு அதிகரிப்பு

7

இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை இரு மடங்கு உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறுகையில் நிறைவுற்ற காலாண்டில் பிரேசில், சீனா, இந்தியா, தாய்லாந்து மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் இருமடங்கு வளர்ச்சியை ஆப்பிள் செல்போன்கள் கண்டுள்ளன என்றார். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

 

இந்தியாவில் ஐபோன் 11 மற்றும் ஐபோன் எக்ஸ் ஆர் போன்ற மாடல்கள் அதிகம் விற்பனையாகி உள்ளதாகவும் சர்வதேச சந்தையில் ஐபோன் மூலம் கிடைத்த வருவாய் 5 ஆயிரத்து 600 கோடி டாலர்கள் என்றும் அவர் கூறினார். ஐமாக் மூலம் 770 கோடி டாலர்களும் ஐபேட் மூலம் 600 கோடி டாலர் வருவாய் பெற்று உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon