--- --:--:-- --

அவதூறு வழக்கு தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு..!

3

மோடி பெயர் தொடர்பான வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்த கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

 

இதனால் அவரது வயநாடு தொகுதி எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்த கோரி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.

 

கடந்த இருபதாம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது. செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இந்த வாரத்திலேயே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Right Menu Icon