ஆசிரியர்கள் போராட்டம் திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!
ஆசிரியர்கள் போராட்டத்திற்கு காரணம் திமுக அளித்த மூன்று வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது தான் என பாஜக தெரிவித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டனம் அறிக்கையில், தமிழகத்தில் போற்றப்பட வேண்டிய ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கைக்காக கையேந்தி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் சம ஊதியம், பணி நிரந்தரம், டெட் ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 முக்கிய அறிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி உள்ளார்.
திமுகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 183, 177, 311 ஆகிய எண்களில் உள்ள வாக்குறுதிகள் இவைகள் தான். இந்த வாக்குறுதிகளை திமுக மறந்துள்ளதா மறைக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை ஆசிரியர்களின் ஊதிய வேறுபாட்டை கலைந்து மனக்குறையை நீக்கி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





