அண்ணா – கலைஞர் அறிவாலயம் இன்று முதல்வர் திறப்பு
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மாலை திறந்துவைக்க உள்ளார். டெல்லியில் உள்ள பகுதியில் திமுக அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலய விழா திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தமிழக முதலமைச்சரும் ,திமுக தலைவருமான மு க ஸ்டாலின், அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் திறந்துவைக்க உள்ளார். பின்னர் அண்ணா கலைஞரின் சிலையையும், பேராசிரியர் அன்பழகன் பெயரிலான நூலகத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக அமைச்சர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.






