--- --:--:-- --

சி‌பி‌ஐ காவல்துறையினருக்கு அரசியல் தொடர்பு கூடாது..!

2

சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் சுயேச்சையான ஒரு பொதுவான அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்‌வி ரமணா கூறியுள்ளார்.

 

டெல்லியில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் நம்பகத்தன்மை தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதாக தெரிவித்தார். சில வழக்குகளில் சி‌பி‌ஐ எடுக்கும் நடவடிக்கைகளும், சில வழக்குகளில் அது அமைதி காப்பதும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதாக தலைமை நீதிபதி கூறினார்.

 

இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை சுயேச்சையான ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டார். லஞ்ச ஊழல், பாரபட்சம் பார்ப்பது, அரசியல்வாதிகளுடன் நெருக்கம் போன்ற காரணங்களால் காவல்துறையின் பெருமை சீர் குலைந்து வருவதாகவும் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார்.

 

இதிலிருந்து மீள்வதன் முதல்படியாக அரசியல் தொடர்புகளை காவல்துறையினர் முறித்துக் கொள்ளவேண்டும் என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இந்திய நீதித்துறை மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தபோதும் அதன் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்து இருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon