கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சான் பட நடிகர் உயிரிழப்பு..!
கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சான் பட நடிகர் விக்ரம் ஜித்கன்வர்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 52. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற விக்ரம் ஜித்கன்வர்பால் 2003ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.
3டி, ஹாரர் ஸ்டோரி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஸ்பெஷல் ஆக்சன் ,வெப்சீரிஸ் மூலம் பிரபலமான விக்ரம் ஜித்கன்வர்பால் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் நடிகை சமந்தாவுக்கு தந்தையாக நடித்திருந்தார்.






