காதல் தகராறில் ஏற்பட்ட மோதலில் ஐடிஐ மாணவர் அடித்துக் கொலை..!
கரூர் மாவட்டம் அய்யர் மலையில் காதல் விவகாரத்தில் உண்டான மோதலில் ஐடிஐ மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அய்யர்மலை அரசு கல்லூரியில் படித்து வரும் கணக்கம்பில்லை ஊரை சேர்ந்த குரு பிரகாஷ் மாணவி ஒருவரை காதலித்துள்ளார்.
அந்த மாணவியோ ஆட்டோ ஓட்டுனர் அருண்குமாரை காதலித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான முன்பிரோதத்தில் மாணவர் குரு பிரகாஷை , ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிமறித்து தாக்கியுள்ளார். இதனை தடுக்க சென்ற குரு பிரகாஷின் உறவினரான ஐடியை மாணவர் விக்னேஷையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் உயிரிழந்தார். சபதம் தொடர்பாக அருண்குமார் கல்லூரி மாணவர்கள் செல்லதுரை, விஜய் சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





