மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி… மாற்றத்தை உருவாக்கும் வரலாற்றுத் தேர்தல் – ஜி.கே. வாசன்
தமிழகத்தில் மக்கள் விரோதமாக செயல்பட்டு வரும் திமுக ஆட்சியிலிருந்து மாற்றம் அவசியம் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் இந்திய அரசின் தலைமையில் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், உலகளாவிய போர் சூழ்நிலைகளிலும் இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சிகளே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வரவிருக்கும் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும், மக்கள் விரோத ஆட்சியாக விமர்சிக்கப்படும் திராவிட முன்னேற்றக் கழகம் அரசை மக்கள் நிராகரித்து வீட்டுக்கு அனுப்பும் தேர்தலாக இது அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.





