தூத்துக்குடி தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் – வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடி தொகுதியில் தவெக கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நடிகர் ஸ்ரீநாத், தேர்தலை முன்னிட்டு ராயபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்களை நேரடியாக சந்தித்து தனது தேர்தல் வாக்குறுதிகளை விளக்கி, ஆதரவு கோரிய அவர், உள்ளூர் பிரச்சினைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்து தீர்வு காண உறுதியளித்தார்.
இந்த பிரச்சாரத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பை வலுப்படுத்தினர்.





