--- --:--:-- --

த.வெ.க மதுரை மாநாட்டுக்கு வந்த 18 வயது இளைஞர் மரணம்..!

6

துரையில் நடைபெற்ற த.வெ.க-வின் மாநில மாநாட்டுக்கு வந்த நீலகிரியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

 

இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்து பல ஆயிரக் கணக்கான த.வெ.க தொண்டர்கள் கலந்துகொண்டனர். த.வெ.க மாநாடு நிறைவடைந்த நிலையில், மாநாட்டுக்கு வந்த நீலகிரியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவம் த.வெ.க-வினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதான ரோஷன் என்ற இளைஞர் த.வெ.க-வின் மதுரை மாநாட்டுக்கு வந்துள்ளார். கூட்ட நெரிசலால் மாநாட்டுத் திடலிலேயே ரோஷன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அப்போது, அங்கிருந்த மருத்துவ குழுவினரால் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.

 

 

இதையடுத்து, ரோஷன் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சமயநல்லூர் அருகே மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருடன் வந்தவர்கள் உடனடியாக அவரை சமயநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரோஷன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 

தற்போது ரோஷனின் உடல் சமயநல்லூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் த.வெ.க மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Right Menu Icon