--- --:--:-- --

டெல்லியில் அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!

3

டெல்லியில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி மாநில தலைவர் அனில் குமார் சவுத்திரி, ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் கொரொனா பரிசோதனை முறைகள் எளிதாக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்க கூடிய குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon