--- --:--:-- --

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை!

4

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேரவில்லை.

 

அவர்களின் பொருளாதார நிலை, வாழ்க்கை தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் அளவிற்கு பொருளாதார வசதிகள் அம்மாணவர்களுக்கு இல்லை என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

 

ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் இந்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவையில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

Leave a Reply

Right Menu Icon