காதல் விவகாரத்தில் தீ வைத்து கலவரத்தை ஏற்படுத்திய குடும்பத்தார்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரம் தொடர்பாக வீட்டை சேதப்படுத்தியவர்கள் 5 பெண்கள் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொன்னேரி பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி சிங்கப்பூரில் பணியாற்றி வரும் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த திருப்பதி ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்திருந்த பிரியதர்ஷனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினார். திருப்பதியின் பெற்றோரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இதை அறிந்த பெண்ணின் தந்தை சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 60க்கும் மேற்பட்டோர் திருப்பதியில் வீட்டை சேதப்படுத்தி தீவைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் துறையினர் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பெண்கள் உட்பட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பெண்ணின் தாயும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய திருப்பதி அவரது பெற்றோர் பிரியதர்ஷனி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.







