--- --:--:-- --

சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா..!

6

தென்சீனக் கடலில் சர்வதேச கடல் விதிகளை மீற நினைத்தால் தோழமை நாடுகளுக்காக களமிறங்கி வேண்டி இருக்க வேண்டுமென சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் சீனா சொந்தம் கொண்டாடி வருவதால் பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

 

கடல்பகுதியில் வர்த்தகரீதியான கப்பல் போக்குவரத்தும் சீனா முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தென் சீன கடல் பகுதியில் சீனா சொந்தம் கொண்டாட முடியாது என 2016 தீர்ப்பளிக்கப்பட்டது.

 

இந்த தீர்ப்பை சீனா மதித்து நடக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. தோழமை நாடான பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினாலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Right Menu Icon