--- --:--:-- --

எல்லையில் எப்போதும் போருக்கு தயாராக இருக்க வேண்டும்..!

10

1597 கிலோமீட்டர் நீள கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் டாங்கிகள், பீரங்கிகள் உடன் படைகள் குவிக்கப்பட்டுள்ள காலகட்டம் இயல்பான கால கட்டம் அல்ல என்றும் முப்படைகளும் அமைதி காலத்திற்கான பொழுதுபோக்கு கொண்டாட்டங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிபின் ராவத் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

 

லடாக் எல்லையில் எந்த நேரத்திலும் நிலைமை மோசமடைய கூடும் என்பதால் எத்தகைய ஒரு நிலையையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்பதே இதன் பொருள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

கடற்படையின் கீழ் வரும் சிறப்பு போர் நடவடிக்கைகளுக்கான மார்கோஸ் எனப்படும் மெரைன் கமாண்டோ படையும் கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட உள்ளது. பூமியின் துருவப் பகுதியில் உள்ளது போல பனிப்பொழிவு, உறைய வைக்கும் காற்று என கடும் குளிர் நிலைநிலைக்கு பழகும் வகையில் மற்றும் சிறப்புபடைப்பிரிவினர் உடன் மரைன் காமாண்டோக்களும் நிறுத்தப்படவுள்ளன.

 

ஏற்கனவே கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள வீரர்களுக்கு கடும் குளிர் நிலைக்கு ஏற்ற ஆடைகள், முகக் கவசங்கள், அமெரிக்க ராணுவத்திடம் இருந்து நவம்பர் முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon