மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்ஷய்..!
பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய்குமார் தினமும் மாட்டு கோமியத்தில் குடிப்பதாகக் கூறியுள்ளார். டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் அக்ஷய்குமார் கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் பியர் கிரில்ஸ் தனக்கு யானை சாணத்தில் டீ போட்டு கொடுத்ததாக அக்ஷய் குமார் தெரிவித்தார். இந்நிலையில் பியர் கிரில்ஸ் அக்ஷய்குமார் நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் சமூக வலைத்தளத்தில் லைவ் வீடியோ செய்தனர்.
அப்போது யானை சாணத்தில் போட்ட டீயை எப்படி தான் கொடுத்தீர்களோ என்று குரேஷி அக்ஷய் குமாரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த அக்ஷய்குமார் தினமும் மாட்டு கோமியம் குடிப்பதால் அது எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை என்றார்.







