--- --:--:-- --

அதிரடியாக மூடப்படும் வான்வெளி – 11 நாட்கள் விமானம் ரத்து

7

சிங்கப்பூரில் ஏர் ஷோ நடைபெறவுள்ளதால் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை தற்காலிகமாக வான்வெளி மூடப்பட உள்ளது. இதனால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பயணிகளுக்கும் அவர்களது விமானம் தொடர்பான தகவல்கள் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.

 

பயணிகள் அதிகாரப்பூர்வ பக்கள் மூலம் விமானம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். விமான ரத்தானதால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் அதற்கு பதிலாக வேற விமானங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்படுவார்கள். அவர்கள் பயணம் செய்யவில்லை என்றாள் அந்த டிக்கெட்டிற்கான முழு பணமும் திரும்ப வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், டிராவல் ஏஜெண்ட் மற்றும் எஸ்.ஐ.ஏ பார்ட்னர் ஏர்லைன்ஸ் மூலம் டிக்கெட் புக் செய்தவர்கள் உங்கள் ஏஜெண்டை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon