--- --:--:-- --

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கொரொனா தொற்று உறுதி..!

12

அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே அவரது மனைவிக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

அதில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரொனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அமைச்சருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததால் அமைச்சருக்கு கொரொனா தொற்று இல்லை எனவும், அவரது மனைவிக்கு மட்டுமே கொரொனா தொற்று உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் இன்று மீண்டும் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டத்தில் அவருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon