முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடனான பேச்சுவார்த்தையில் இதுவரை சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. கடலூர் மாநகராட்சி மற்றும் விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட 8 நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி கடலூர் மாநகராட்சி மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 43 பேரும், சிதம்பரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வெளிக்குப்பம் நகராட்சியில் 29 வேட்பாளர்களுக்கும், பண்ருட்டி நகராட்சியில் 30 வார்டுகளுக்கும், விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் வேட்பாளர்வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
திட்டக்குடி நகராட்சியில் 24மாடுகளுக்கும் விழுப்புரம் நகராட்சியில் நாற்பத்தி இரண்டு நாடுகளுக்கும் திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகளுக்குமான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. திட்டக்குடி நகராட்சியில் 24 வார்டுகளுக்கும் , விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளுக்கும், திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் விழுப்புரம், திண்டிவனத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் கூட்டணிக் கட்சிகளுக்கு இடமில்லை. தர்மபுரி நகராட்சியில் 2 வார்டுகள் தவிர மீதமுள்ள 31 வார்டுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சியான பாஜக உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ளனர். இன்று மாலைக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மொத்த வேட்பாளர் பட்டியல் அதிமுக சார்பில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.






