மார்பக புற்று நோய் அறுவை சிகிச்சையின் போது பாடல் பாடிய நோயாளி..!
உலகத்திலேயே முதன் முறையாக மார்பக புற்றுநோயால் பாதித்த பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது பாடல் பாடிக்கொண்டிருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக சீதாலட்சுமி என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் பொழுது சீதாலட்சுமி விழிப்பு நிலையை அடைந்தார்.
அப்பொழுது மயக்க மருந்து கொடுக்க முடியாத சூழலில் மருத்துவர்கள் பாடல் ஒன்று பாட தொடங்கியுள்ளனர். ஆசிரியரான சீதாலக்ஷ்மி இளையராஜாவின் திரைப்படப் பாடலான கற்பூர பொம்மை ஒன்று என்ற பாடலை பாடியுள்ளார்.
டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் சீதாலட்சுமி நலமுடன் வீடு திரும்பியுள்ளார். அவர் பாடல் பாடிய அந்த வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





