பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்படும்..!
மத்திய அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு கூடுதல் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2 ரூபாய் 50 காசுகளும், ஒரு லிட்டர் டீசலுக்கு 4 ரூபாய் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2ஆம் தேதியில் இருந்து இந்த வரி அமல்படுத்தப்படுகிறது. இதனால் நுகர்வோருக்கு எந்த கூடுதல் சுமையும் ஏற்படாது என்றும், கலால் வரியில் குறைக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.






