மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 சேர்த்து 29 ஆயிரம் ஆக வழங்குக : அண்ணாமலை
தகுதி உள்ள என்ற வரையறையை மாற்றி 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயில் உரிமைத்தொகையாக வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளான பின்னர் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவிற்கு ஞாபகம் வந்ததே மகிழ்ச்சி என விமர்சித்துள்ளார்.
அதோடு வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும் பொழுது முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவை தொகையுடன் சேர்த்து 29 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





