வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ள படத்தில் சசிகுமார் நடிக்கிறார்..!
இயக்குனர் வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ள படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். அசுரன் படத்திற்கு பிறகு நகைச்சுவை நடிகர் சூரி நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் வெற்றிமாறன் உள்ளார்.
அதன்பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தையும் இயக்குகிறார். இந்நிலையில் நடிகர் சசிகுமார் நடிக்கும் ஒரு படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார் வெற்றிமாறன். அதற்கு மதுரை, சென்னை பின்னணியில் கதைக்களம் அமைத்துள்ளார்.
மேலும் தன்னுடைய பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் ஆகிய படங்களை தயாரித்த கதிரேசன் உடன் இணைந்து அந்த படத்தை தயாரிக்கிறார் வெற்றிமாறன். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
முதற்கட்ட வேலைகளை முடித்த பிறகு அதில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர். மேலும் சசிகுமார் வெற்றிமாறன் இணையும் படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி இறுதியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







