நடிகை மீரா மிதுன் மீண்டும் தலைமறைவு ..!
பட்டியலினத்தவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக மீராமிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில் மீராமிதுன் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. அவர் மீண்டும் தலைமறைவாகி உள்ளதாகவும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு ஆஜர்படுத்தப்படுவார் என காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.





