அரசுப் பேருந்தின் சக்கரம் ஏறியதில் 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் ஏறியதில் 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்து மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வெங்கடேசன் – புவனேஸ்வரி தம்பதியினரின் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





