ரசிகர் கூறியதற்கு கடுப்பான நடிகை அனைகா சோட்டி..!
பெற்றோர் லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைத்தால் உங்களது ஆசை இப்படி இருப்பது வேதனைக்குரிய விஷயம் என்று நடிகை அனைகா சோட்டி பதிவிட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. சித்தார்த் நடித்த காவியத்தலைவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனைகா சோட்டி .
இவர் ஜீவாவின் கி, அதர்வாவின் செம போதை ஆகாதே, சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தினமும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது, ரசிகர்களிடம் உரையாடுவது என்று லண்டனிலும் படு பிசியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ரசிகர்கள் தங்களது ஆசிகளையும் ரகசியங்களையும் தன்னிடம் சொல்லலாம் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். நடிகையின் இந்த பதிவுக்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது ஆசைகளையும் விருப்பங்களையும் பதிவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் அனைகா சோட்டியின் தீவிர ரசிகர் ஒருவர் நான் உங்களை போன்று அழகு பெண்களுக்கு உட்கார சேராக இருக்க விரும்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்து கடுப்பான நடிகை உங்களது பெற்றோர் லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைத்து பிள்ளைகளை டாக்டராக்க வேண்டும், இன்ஜினியராக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள்.
நீங்கள் எனக்கு இருநூறு ரூபாய் சேராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.



