நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு..!
நடிகர் விஜய் பயன்படுத்திவரும் ரோஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரி நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறார்.
சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த காருக்கு இறக்குமதி வரியை கட்டியுள்ள விஜய் தமிழக அரசு நுழைவு வரியை கட்ட மறுப்பு தெரிவித்து அதற்கு விலக்கு அளிக்க கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் தான் ஒரு நடிகர் என்பதை குறிப்பிடாமல் விஜய் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தங்களை சமூக நீதிக்காகப் போராடும் ஹீரோக்களாக காட்டிக்கொள்ளும் நடிகர்கள் வரி செலுத்த மறுப்பது தவறான முன்னுதாரணம் எனவும் குறிப்பிட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் வழக்கு தொடுத்தற்கு அபராதமாக ஒரு லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.






