கொரொனாவிலிருந்து மீண்டு அறுவை சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற நடிகர் வேணு அரவிந்த்..!
நடிகர் வேணு அரவிந்த் கொரொனா பாதிப்பில் இருந்து தப்பி மூளைக்கட்டி காரணமாக கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சின்னத் திரை உலகத்தை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இயக்குனர் கே பாலசந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். டிவி தொடர்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ராதிகாவுடன் வாணிராணி, அலைகள் உள்ளிட்ட பல தொடர்களில் முன்னணி வேடங்களில் நடித்திருந்தார்.
மேலும் 2000 ஆம் ஆண்டு வெளியான அலைபாயுதே மற்றும் 2006 ஆம் ஆண்டு வெளியான வல்லவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சபாஷ் சரியான போட்டி என்ற படத்தை இயக்கமும் செய்துள்ளார். சின்னத்திரை வட்டாரத்தில் பக்கா ஜென்டில்மேன் என்று சின்னத்திரை பிரபலங்கள் சொல்வது உண்டு.
குறிப்பாக கிசுகிசுக்கள் எதிலும் சிக்கிக் கொள்வதில்லை. சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார். அதனை தொடர்ந்து நிமோனியாவால் பாதிக்கப்பட்டு பின்பு அவரது மூளையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அப்போது வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்று விட்டார்.
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.






