--- --:--:-- --

கொரொனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யா மீண்டுள்ளார்..!

7

கொரொனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யா அதிலிருந்து மீண்டு உள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா கொரொனாவால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சில நாட்களிலேயே அவர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

 

இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சூர்யாவுக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

 

அதனால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் தன்னுடைய நாற்பதாவது திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon