--- --:--:-- --

நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளன்று உயிரிழந்த அவரது 5 ரசிகர்கள்..!

3

தெலுங்கானாவில் நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளை கொண்டாட சென்றபோது விபத்தில் சிக்கி 5 ரசிகர்களும், பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி 3 ரசிகர்களும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பவன் கல்யாண் தனது 42வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறார்.

 

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே போச்சம் மைதானத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் பவன் கல்யாண் பிறந்த தினத்தை கொண்டாட காரில் வாரங்கள் சென்ற நேரம் முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த லாரி மீது இவர்கள் சென்றனர். முன்னாள் சென்ற கார் மோதி விபத்திற்குள்ளானது.

 

இதில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஒரு கிராமத்தில் 30 அடி உயரத்திற்கு பவன் கல்யான் ரசிகர்கள் பேனர் கட்டினர். அப்போது அங்கு இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் பேனர் விழுந்ததில் மின்சாரம் தாக்கியது.

 

இதில் பவன் கல்யான் ரசிகர்கள் சோமசேகர், அருணாச்சலம் ஆகியோர் உயிரிழந்தனர். இதில் 3 பேரும் சகோதரர்கள் அவர் படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Leave a Reply

Right Menu Icon