கமலுக்கு கவுரவ டாக்டர் பட்டம் : ஒடிசா பல்கலைக்கழகம் வழங்குகிறது!!
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமலுக்கு, ஒடிசா பல்கலைக்கழகம் நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. இதற்காக புவனேஷ்வர் சென்றுள்ள கமல், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை இன்று சந்தித்துப் பேசினார்.
ஒடிசா மாநிலம் சீதாப்பூரில் உள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழகம், கமலின் கலைச்சேவையைப் பாராட்டி கவுரவ டாக்டர் வழங்குவதாக அறிவித்திருந்தது. நாளை நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கமலுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவவிக்கிறார். அத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், கமலின் சொந்த ஊரான பரமக்குடியில் சமீபத்தில் மய்யம் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டது.இந்த திறன் மேம்பாட்டு மையத்திற்கு கிராம் தரங் திட்டத்தின் கீழ் வழி காட்டுதல் வழங்கவும் ஒடிசாவின் செஞ்சூரியன் பல்கலைக்கழகம் ஒப்புதல் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த டாக்டர் பட்டம் வழங்கும் விழாவிற்காக கமல், இன்று ஒடிசா தலைநகர் புவனேஷ்வர் சென்றார். அங்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்த கமல், பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்தும் விவாதித்தார்.





