கோவை அரசு மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பயன்பாட்டிற்கென முக கவசங்கள் மற்றும் முக ஷீல்டுகளை வழங்கிய கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 B1 உடன் இணைந்து குறிச்சி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அரிமா சங்கத்தினர் !!!
கொரோனா நோய் தொற்று கோவை மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இங்கு பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பு கருதி முக கவசங்கள் மற்றும் வைரஸ் தடுப்பு முக ஷீல்டுகளை கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 பி்.1 உடன் இணைந்து குறிச்சி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அரிமா சங்க தலைவர் அரிமா கார்த்திகை வேலு அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.

மாவட்ட அரிமா சங்க மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார் ஒருங்கிணைப்பில் சுமார் ஒரு லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட அரிமா ஆளுநர் திரு கருணாநிதி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் காளிதாஸ் மற்றும் மருத்துவ இருப்பிட அதிகாரி டாக்டர் பொன்முடி செல்வன் ஆகியோரிடம் வழங்கினார்.
இதில் சங்க சர்வீஸ் கமிட்டி சேர்மன் அரிமா தனராஜ் மாவட்ட அரிமா சங்க துணைச் செயலாளர் அரிமா மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







