--- --:--:-- --

நடிகைகள் ராகிணி, சஞ்சனா இருவரும் சிறையில் மோதிக்கொள்வதாக தகவல்..!

7

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி பெங்களூரு சிறையில் இருக்கும் நடிகைகள் ராகினி, சஞ்சனா இருவரும் சிறைக்குள் மோதிக்கொள்வது தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ராகிணி, சஞ்சனா இருவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

 

இதில் ராகினி சக கைதிகளுடன் காலை முதல் மாலை வரை பேசி வருவதாகவும் இரவு நேரத்தில் விளக்கு எரிய விட்டு புத்தகம் படிப்பதாகவும் கூறப்படுகிறது. விளக்கு எரிவதால் தூங்க முடியவில்லை என்று சஞ்சனா புகார் அளித்துள்ளதாக சொல்லப் படுகிறது.

 

அதே நேரத்தில் சஞ்சனா அதிகாலையில் எழுந்து விளக்கை எரியவிட்டு யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் தன்னால் தூங்க முடியவில்லை என்று சிறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த விவகாரம் தொடர்பாக இரு நடிகைகளும் தினமும் மோதி கொள்வதோடு சில நேரங்களில் கைகலப்பில் ஈடுபட்ட தாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon