--- --:--:-- --

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை..!

4

மிழ்நாட்டில் விரைவில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ் ராஜேஷ்குமார் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மோசமாக இருப்பதாக சுட்டிக் காட்டினார்.

 

அதற்கு பதிலளித்து பேசிய துறையின் அமைச்சர் சக்கரபாணி தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் இருப்பதாக கூறினார். இவற்றில் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளை வசதி படைத்த சிலர் பெற்றிருப்பதும், முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைகள் வசதி இல்லாதோருக்கு வழங்கப் பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக கூறினார்.

 

இது பற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தரமான அரிசியை வழங்க தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளதாகவும் ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்யும் ஆலைகள் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் கலரிங் என்று அரிசியை தரம் பிரிக்கும் இயந்திரத்தை நிறுவ உத்தரவிட்டுள்ளதாகவும் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon