--- --:--:-- --

காவலராக இருந்தே நீட் தேர்வில் சாதனை.. குவியும் பாராட்டு..!

4

ர்மபுரியில் காவல்துறையில் பணியாற்றிக் கொண்டே நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ இலக்கை அடைவதை காவலர் சிவராஜ்க்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பென்னகரத்தை அடுத்த முதுகம்பட்டியை சேர்ந்தவர் சிவராஜ்.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பை நிறைவு செய்தவர், சிறு வயது முதலே மருத்துவக் கனவோடு இருந்து வந்துள்ளார். தொடர்ந்து மருத்துவம் பயில முடியாமல் போனதால் வேதியியல் பயின்று கடந்த 2020 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்ச்சி பெற்ற பணிபுரிந்து வந்தார்.

 

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்த சிவராஜ் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 400 மதிப்பெண் பெற்று பயிற்சி அடைந்தார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7.5% சிவராஜ் கலந்தாய்வில் பங்கேற்க கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தேர்வு செய்துள்ளார்.

 

Right Menu Icon