--- --:--:-- --

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் பலியான சம்பவம்..! விசாரணை அதிகாரி நியமனம்!!

indian-2-

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் டு படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதனை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையை அடுத்த நசரத்பேட்டை யில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது .

 

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு நடந்து முடிந்த சில வினாடிகளில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு உதவி இயக்குனர்கள் உட்பட 3 பேர் பலியாகினர்.திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்திய இந்த விபத்து தொடர்பான விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப் பட்டுள்ளது.

 

இந்த விபத்து தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம், படப்பிடிப்பு தள நிர்வாகம், கிரேன் உரிமையாளர், ஆபரேட்டர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி நியமிக்கப்பட்டு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

 

விபத்து தொடர்பாக, சம்பவ இடத்தில் இருந்த இந்தியன் 2 பட நாயகன் கமல், இயக்குநர் ஷங்கர், கதாநாயகி காஜல் அகர்வால் உள்ளிட்ட படக் குழுவினரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவரை ஜாமீனில் விடுவித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon