மளிகை கடையில் இருந்து சுமார் 50 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல்..!
ராஜபாளையம் அருகே மளிகை கடையில் இருந்து சுமார் 50 கிலோ குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ராஜபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பார்வதிநாதன் என்பவரது மளிகை கடையில் புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் இந்திரா நகர் தெற்கு தெருவை சேர்ந்த குருமூர்த்தி மற்றும் விஷ்வா ஆகியோர் மூலம் புகையிலை பொருட்களை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து சுமார் 5 கிலோ எடையுள்ள போதை மற்றும் பான் மசாலா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.





