இன்ஸ்டாகிராமில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய நபர்..!
கோவையில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இளம் பெண் தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை பணிபுரியும் இடத்திற்கு சென்று கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
குனியமுத்தூரை சேர்ந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சேலத்தை சேர்ந்த தினேஷ் என்பவருடன் இரண்டு ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன் தினேஷ் இளம் பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார்.
காதலை ஏற்க மறுத்த இளம்பெண் செல்போன் எண்ணை பிளாக் செய்ததோடு பேசுவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் இளம்பெண் பணிபுரியும் இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டதோடு மறைத்து வைத்திருந்த குத்தியுள்ளார். சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் தினேஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.





