--- --:--:-- --

ஆம் ஆத்மி இன்று உண்ணாவிரத போராட்டம்..!

5

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

 

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஜனநாயகத்தை காப்பாற்றவும் நாட்டை நேசிப்பவர்களும் இந்த போராட்டத்தில் கைகோர்க்க வேண்டும் என்றும் அரசியல் பாகுபாடு இன்றி அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கலாம் என்றும் இந்த போராட்டத்தை பதிவு செய்ததற்காக தொடங்கப்பட்ட கெஜ்ரிவால் இணையதளத்தில் மக்கள் தங்கள் உண்ணாவிரத போராட்ட புகைப்படங்களை பதிவேற்றலாம் என தெரிவித்துள்ளது.

 

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் வரும் 21ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளது திஹார் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon