ஆதார் திருத்தங்களுக்கு இன்று முதல் 25ஆம் தேதி வரை நடமாடும் முகாம்..!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து இன்று முதல் 25ஆம் தேதி வரை நடமாடும் ஆதார் முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் திருப்பதி நகரத்தில் இன்று முதல் 25ஆம் தேதி வரை நடமாடும் ஆதார் முகாம் நடத்தப்படுகிறது. இதில் மக்கள் தங்கள் ஆதார், முகவரி உள்ளிட்டவற்றை மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.





