கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட பெண்..!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அசாம் மாநில இளைஞர் அறிவாளால் வெட்டியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே மாநிலத்தை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதி வசித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் குட்லு என்ற இளைஞருக்கும் சுமிதா பானுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
சுமிதா தனது இரண்டு குழந்தைகளுடன் குட்லு வீட்டிற்கு சென்று கடந்த 7ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் குழந்தையை கொன்றுவிட்டு அந்த பெண்ணையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியதாக கூறப்படுகிறது. நான்கு தனி படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.





