ஒன்றரை வயது மகனை காப்பாற்ற புலியுடன் போராடிய பெண்..!
மத்திய பிரதேசத்தில் புலியுடன் சண்டையிட்டு ஒன்றரை வயது மகனை பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார். புலிகள் சரணாலயத்தில் உள்ள புலி ஒன்று அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள சுகன்யா கிராமத்திற்குள் புகுந்து உள்ளது. இதை அறியாமல் ஒரு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு பெண் ஒருவர் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது மறைந்திருந்த புலி திடீரென இரண்டு பேரையும் தாக்கியுள்ளது. இதில் மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பெண்ணுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இருப்பினும் மனம் தளராமல் புலியுடன் போராடி தனது மகனை காப்பாற்றியுள்ளார்.
அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து புலியை விரட்டி அடிக்க இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





