--- --:--:-- --

வீட்டில் சுவர், கோயில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த காட்டு யானை..!

5

கோவையில் வீட்டின் சுற்றுச்சுவர் கோயில், ஜன்னல் ஆகிய கண்ணாடிகளை காட்டு யானைகள் உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒட்டி இருப்பதால் சமீப காலமாக காட்டு யானைகள் அதிக அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புகளுக்கு வந்து செல்கின்றன.

 

இந்த நிலையில் கோயில் ஓன பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் ராஜகோபால் வீட்டின் மதில் சுவரை முட்டி தள்ளிய யானைகள் அருகில் இருந்த கோயிலையும் சேதப்படுத்தியது. இந்த காட்சிகள் அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

இதற்கிடையே கோவைப்பூண்டி வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள அன்னதான பொருட்கள் வைக்கும் அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை 3 மணி நேரத்திற்கு மேலாக வெளியே வராமல் இருந்துள்ளது. தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் வாழைப்பழங்களை போட்டு யானையை வெளியே வரவழைத்து வனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon