--- --:--:-- --

வானத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு..!

7

காங்கோவில் மேக வெடிடிப்பால், கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 227 பேர் உயிரிழந்தனர். காங்கோவில் கிபு மாகாணத்தில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

 

இதனால் பல இடங்களில் திடீரென்று வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் அடித்து சென்றது. ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேற்றில் புதைந்துள்ளன.

 

வீடுகளில் இருந்த சிறுவர்கள், பெண்கள் முதியவர்கள் சேற்று வெள்ளத்தில் சிக்கி மீள முடியாமல் மரணம் அடைந்தனர். வீடுகள் மட்டும் இல்லாமல் மருத்துவமனைகளும் பள்ளிக்கூட கட்டிடங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

 

இதுவரை 227 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில் பலரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக ருவாண்டா உகாண்டா நாடுகளில் கன மழை பெய்தது.

 

Right Menu Icon