--- --:--:-- --

தலைமை ஆசிரியர் அடித்ததால் மாணவியின் கண்பார்வை பறிபோன அவலம்..!

8

த்தூர் அருகே தலைமை ஆசிரியர் அடித்ததால் தனது இடது கண் பார்வை பறிபோனதாக மாணவி அளித்த புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

 

அதில் தலை வாசலில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு தலைமை ஆசிரியர் முருகவேல் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது அருகில் இருந்த மாணவியை அடிப்பதற்காக குச்சியை வீசிய நிலையில் அவர் எதிர்பாராதவிதமாக மற்றொரு மாணவியின் கண்ணில் பட்டதாக தெரிகிறது.

 

இதில் மாணவியின் கண்பார்வை பறிபோனதாக தெரிகிறது. இதனிடையே ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை டிஎஸ்பியிடம் மனு அளித்தார்.

 

கோட்டாட்சியர் அனுப்பிய அறிக்கையை ஆய்வு செய்ய ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுபடி விசாரணை நடத்திய தலைவாசல் போலீசார் மாணவி மீது தாக்குதல், வன்கொடுமை சட்டம் உள்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் முருகவேலை கைது செய்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மண்டபத்தில் சேலம் மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon