திருவானையில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் பட்டு போன மரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மதுரையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாரதி நகர் அருகே நீண்டகாலமாக பட்டுப்போய் வாகை மரம் ஒன்று நிற்கிறது. பட்டுப்போன மரம் என்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் இதை கடக்கும் பொழுது அச்சத்துடனேயே கடக்க வேண்டியிருக்கிறது. போக்குவரத்து நெரிசலான நேரங்களில் விழுந்தால் பேராபத்து ஏற்படும் . எனவே ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பே இந்த பட்டுப்போன மரத்தை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.






